Thursday, May 23, 2019

இந்திய இறையாண்மையும் இஸ்லாமிய சமுதாயமும்


இந்திய இறையாண்மையும் இஸ்லாமிய சமுதாயமும்..
                                                               சி .ஜே.ஷாஜஹான்


இஸ்லாமியர்களின்  புனித மாதமான ரம்ஜான் பிறை பார்த்தலுடன் தொடங்கிவிட்டது. வைகைறையிலிருந்து சூரியன் மறையும் மாலை வரை  உண்ணாமல், தண்ணீர்கூட குடிக்காமல்  , ஆண்களும் பெண்களும் நோன்பிருந்து  இரவு நேரத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் மாதம்முஸ்லீம்களின் இறை வேதமான திருக்குரான் வானவர்  ஜிப்ரீல் மூலமாக நபிகள் நாயகத்திற்கு மதீனாவிலும் மக்காவிலும் அருளப்பட்ட புனித மாதம். பள்ளிவாசல்கள் இரவுநேரங்களிலும் நிரம்பி வழிகின்றன.

மறுமை வாழ்விற்காக மட்டுமே எப்பொழுதும்  கையேந்தும் கைகள், இன்று  இலங்கை குண்டு வெடிப்பினால்  ஏற்பட்டிருக்கும்  சமுதாய எதிர்மறைத் தாக்கம் , இன்னும் சில நாட்களில் வெளிவரப்போகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளினால் ஏற்படப்போகும் சமூக எதிர்வினைகள் பற்றிய கவலை சூழ்ந்த அச்சம் காரணமாக  இன்னொரு எதிர்பார்ப்பையும் தங்கள் இறைவனிடம் முன்  வைப்பதை இந்தியா முழுவதும் உணரமுடிகிறது.

நாடு விடுதலையடைந்த இந்த எழுபத்தியிரண்டு ஆண்டுகளில் இந்து- முஸ்லீம் மதக் கலவரங்கள் ஆங்காங்கே வெடித்தபோதிலும் இந்திய இறையாண்மை இன்று போல் என்றும் வலுவிழந்ததில்லை. பெரும்பாலான கலவரங்கள் வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உருவாகி அந்தந்த மையங்களில் அடங்கிப் போனதுதான் உண்மை. ஆனால் இன்றோ நிலைமை வேறுநேரிடை வன்முறையைவிட , உணர்ச்சிகளின் உளவியல் வன்முறை , இந்த இரண்டு சமுதாயங்களுக்கிடையே அகழிகளைத் தோண்டி , போர்க்கள சூழ்நிலையை உருவாக்கியிருப்பது இந்திய இறையாண்மைக்கு மிகப் பெரும் சவால்.  நேற்று வரை அண்ணன் தம்பிகளாகப் பழகியவர்கள்  சமூக வலை தளங்களில் எதிரிகளாகத் தாக்கிக் கொள்வதைப் பார்க்க வேதனை மிகுகிறது. வடக்கில் தொடங்கிய இந்த நச்சுக் காற்று இன்று தமிழகத்தின் நல்லிணக்க சமூக வாழ்வையும் விட்டு வைக்கவில்லை.

இந்து மதம் சகிப்புத் தன்மையுள்ள ஒரே மதம் . மற்ற மதங்களை ஆக்கிரமிக்காத மதம் என்று ஒருபக்கமும், இஸ்லாமென்றாலே அமைதி, இங்கே தீவிரவாதமிற்கே இடமில்லை என்று இன்னொரு பக்கமும் சொல்லிக் கொண்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்தியவாறு இன்னமும் எத்தனை நாட்கள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப்போகிறோம்  ? 

இந்திய இறையாண்மை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

ஆட்சியைத் தக்கவைக்க உணர்வுகளுக்கு எரியூட்டும் ஆளும் அரசியல்வாதிகளும்ஓட்டு அரசியலுக்காக சுய நலத்துடன் இயங்கும் எதிர்க் கட்சிகளும் , நாட்டின் நலத்தில் அக்கறை கொண்ட சமூக இயக்கங்களும் , இந்திய இறையாண்மையைக் காப்பாற்றத் தவறினால் இன்னொரு நவகாளியை இந்தத் தலைமுறை சந்திக்கும் அபாயம் வெகு தொலைவிலில்லை.

வேதனை தரும் இந்த சூழியியல் நிலைமைக்கு யார் பொறுப்பேற்பதுஅகண்ட பாரதம் என்ற இலக்கில் பயணிக்கும் அமைப்புகளின் அணியிலிருந்து ஆட்சிக்கு வந்திருக்கும் அரசியல் ஆளுமையின் கொள்கை முடிவுகளா அல்லது சிறந்ததொரு  தலைமயில்லாது , இறக்குமதி செய்யப்பட்ட  ‘ வகாபியிஸம் ‘ ‘ சலாபியிஸம்மற்றும் இந்த மண்ணில் மலர்ந்தசூபியிஸம்ஆகிய நேரெதிர் இறை வணக்கக் கொள்கை   வேறுபாடுகளால் பிளவு பட்டுக் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிப்போன இஸ்லாமிய சமுதாயத்தின்  பிற்போக்குத்தனமா ?

பொறுப்புக்குக் காரணம் யாரென்ற ஆய்வைவிட , புதியதொரு நட்புக்கரம் நீட்டி , நம்பிக்கைத்துளிகளை விதைப்பதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம். இதில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் பங்களிப்பும் , கருத்து மாற்றமும் இன்றியமையாததென்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்திய இஸ்லாமிய சமுதாயம்- பின்னணி

இந்திய மக்கள் தொகையான 136 கோடி யில்  ( 2019 )  இஸ்லாமியர்கள் 18 சதவிகிதம் , 24 கோடி பேர் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனஉலக இஸ்லாமிய மக்கள் தொகையில் இந்தோனிஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகைக்கு சமம்சவுதி அரேபியாவைவிட எட்டு மடங்கு அதிகம். வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 7 கோடிதான். இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை அமெரிக்காவின் 34 கோடி மக்களில் 72 சதவிகிதம்.

இப்படிப் பெரும்பான்மையான ஒரு சமூகம் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு குறுகிப்போயிருப்பது இந்திய வாழ்வியல் முரண். இரண்டு மூன்று  சதவிகித வேலை வாய்ப்புச் சலுகைகளுக்காகத் தங்கள் சமூகத்தை சிறுபான்மை என்ற அடைப்புக்குள் நிரந்தரமாக வைக்கப் போராடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுய நலக் குறிக்கோளில் ஒரு சமூகம் தன் தனித்துவத்தை இழந்து போகிறது. அதுமட்டுமல்லாது இஸ்லாமிய இளைய சமுதாயம் தாங்கள் சிறுபான்மையென்ற மன அழுத்தத்தில்   ஒரு வித அச்ச உணர்வோடு வளரும்போது, அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது இலகுவாகிறது. பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்துப் பாதுகாப்பு தேடவேண்டிய சூழ்நிலையில் இவர்கள் சமூக விரோதிகளிடம் பலிகடாவாகிறார்கள். இந்திய இஸ்லாமிய சமுதாயம் முதலில் இந்த சிறுபான்மை என்ற குறியீட்டிலிருந்து வெளிவர வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார  வளர்ச்சி ஆகியவை சலுகைகளாலும் இட ஒதிக்கீட்டால் மட்டுமே பெற முடியாதென்பது இந்த எழுபதாண்டு சமூக வாழ்வின் அனுபவம்.

அரேபியாப் பாலைவனத்தில் தோற்றுவிக்கப்பட்ட   இறைத் தூதர் ஆப்ரஹாமின் மதங்களென அழைக்கப்படும் யூதம், கிறித்துவம், இஸ்லாம்  மூன்றில் இஸ்லாம் இறுதி மதம். கி.பி ஆறாம் நூற்றாண்டில் மக்காவில் முகம்மது நபி அவர்களால் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் புத்துருவம் கொடுக்கப்பட்ட மதம்.  கொலை, கொள்ளையென அறியாமையிருளில் மூழ்கியிருந்த அரேபியர்களிடையே இஸ்லாம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதே காலக் கட்டத்தில்தான் இந்தியாவில் குப்தப் பேரரசின் பொற்காலம் கலை, சிற்பம், இலக்கியமென கொடிகட்டிப் பறந்தது.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் அரேபிய வணிகர்களால் இந்தியாவின் மேற்குக் கரையோரங்களில் , கேரளாவின் மலபார், குஜராத்தின் கொங்கன் பகுதிகளில் அறிமுகமானது. கேரளத்திற்கு வந்த அரபு வணிகர்கள் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை நகரங்களான, கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய ஊர்களில் தங்கி வணிகத்தோடு இஸ்லாமியக் கருத்துக்களையும் பரப்பினர். திருமணத்தொடர்பும் தொடர்ந்தது. இதனால்தான் கேரளத்தில் இவர்கள்மாப்பிள்ளைஎன்று அழைக்கப்பட்டனர். இங்கெல்லாம் இஸ்லாம் உறவு முறையோடு இந்துக்களின் உணர்வுகளோடு கலந்ததுஆனால் வட இந்தியாவோ  கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டுவரை டெல்லி சுல்தான்கள், அலாவுதின் கில்ஜியின் அடிமை வம்சம், துக்ளக் மற்றும் மொகலாய சாம்ராஜ்யங்களின் ஆளுமையில் வந்தபொழுது இஸ்லாம் இங்கே ஆட்சி அதிகாரத்தோடு பரவியது. வட இந்தியக் கலவரங்களின் பின்னணியில் இந்த மத மாற்றக் கசப்பு மறைக்கமுடியாத உண்மை.

இன்றைய இந்திய  முஸ்லீம்களின் மரபணுத் தொடர்பும் தொடக்கமும் இந்திய நாட்டோடு பின்னிப் பிணைந்தது. இவர்களில் யாருமே அரேபிய வாரிசுகளல்ல. எனவே இந்திய முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து வெளியேறு என்று முழக்கமிடுவது வெறும் வெறுப்பு அரசியலேதவிர வரலாற்று உண்மையல்ல.

இந்திய இறையாண்மையின் பின்னணி;

இறையாண்மை என்பது ஒரு தேசிய இனத்தின் மக்கள் முழுச்சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தங்கள் செயல்பாடுகளை நிர்வகித்துக் கொள்ளும் நிலை. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் அறிஞர்கள்  முகப்புரை  (  Preamble ) யின் அறிமுகப்பகுதியில்  ‘ நாம், இந்திய மக்கள் ‘  ( We, the people Of India ) என்றே அரசியலமைப்பை தொடங்குகிறார்கள். இதன் பொருள் , இந்தியாவின் முழு இறையாண்மையை இந்திய மக்கள் தங்களிடத்திலேயே தக்கவைத்துள்ளனர் என்பதாகும். இந்தியாவிலுள்ள அனைத்து மொழி சார்ந்த , மதம் சார்ந்த  இனங்களும்  ‘ வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை உறுதி செய்வதே நாட்டை வழி நடத்தும்  தலைவர்களின் கடமை எனபதே இறையான்மை.
 அரசியலமைப்பு 42 ஆவது சீர்திருத்தம் – 1976 – மூலமாக ‘  சமய சார்பற்ற ‘  (  Secular ) என்ற சொல் உட்படுத்தப்பட்டது. இதன் பொருள் , இந்தியா எந்தவொரு சமயத்தையும் நாட்டு சமயமாக அங்கீகரிக்காது. மற்றும் தனி மனித சமய நம்பிக்கை , அல்லது வழிபாடு உரிமையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் சமமாக மதித்தலே சமய சார்பற்ற நிலையாகும். இதனால்  நாடு சமயத்திற்கு எதிரானது என்பதல்ல. மத நம்பிக்கைகளில்   நாடு நடு நிலையைப் பின்பற்றும்எந்தவொரு சமயத்தைப் பின்பற்றவோ பரப்பவோ செய்யாது.

அரசியலமைப்பு இத்தனைத் தெளிவாக இருந்தாலும் மைய மாநில அரசுகள் இதைப் பின்பற்றுவது கிடையாது. பெரும்பான்மையான மாநிலங்கள் மதச் சடங்குகளை முன் வைத்து விழா வெடுக்கின்றன. இதுவரை இதை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சமீப கால அரசியலில் சமயத்தை அரசு கையாளும் வேகம் சிறுபான்மை சமூகத்தை தூரப்படுத்திவிட்டது.
இதனால் இந்திய இறையாண்மையும்  மதச் சார்பற்றத் தன்மையும் இன்று  சோதனைக்குள்ளாகியுள்ளன.

சமுதாயத்தின் சவால்கள் .

இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மிகப் பெரும் பலவீனம்  அதனை சரியான பாதையில் வழிநடத்திச்  செல்ல வலுவான தேசியத் தலைமை இல்லாததுதான். 25 கோடி இஸ்லாமியர்களுக்கு மக்களவையில் 100  உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். ஆனால் இன்று மொத்தம் 22 உறுப்பினர்களே உள்ள பரிதாபமான நிலை. காயதே மில்லத் இஸ்மாயில் சாஹெபிற்குப்பிறகு இங்கு சரியான தலைமை உருவாகவில்லை. மாநில அளவில் சிலரிருந்தாலும் தேசிய அளவில் இவர்களுக்காகக் குரல் கொடுக்க  மதிப்பான தலைமையில்லை . இதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளுமே வாக்கு வங்கிக்காக முஸ்லீம்களைப் பந்தாடி வருகிறார்கள் .

இஸ்லாமிய சமுதாயத்தின்இன்னொரு பெரிய சவால்  மதம் சார்ந்த கொள்கைகளையும் திருக்குரான் விளக்கும் சட்டங்களையும் சரியான நோக்கில் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க இயலாத , உலேமா எனப்படும் சமயப் பேரறிஞர்களின் தெளிவில்லாகுழப்ப நிலை. இஸ்லாமிய சமுதாயம் மற்ற மதங்களைவிட மதக் கட்டுப்பாடுகளை தினசரி வாழ்விலும் பின்பற்றும் சமூகம். ஷரியத் எனப்படும் இறைவனின் சட்டங்களை சாதாரண அடித்தட்டு மக்களிடம் தவறோ, திரிபோ இல்லாது கொண்டு சேர்ப்பதில் சமய அறிஞர்களுக்கிடையே தெளிவில்லாத நிலைமுத்தலாக் எனப்படும் மண முறிவுப் பிரச்னையில் , மைய அரசு மற்றும் உச்ச நீதி மன்றத்தின் முடிவுகளுக்கு இவர்களால் சரியான நியாயத்தை எடுத்து வைக்க இயலவில்லை. இன்று வரை மணமுறிவு வரைமுறைகளை இந்த அறிஞர்கள் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்திடம் கட்டாயப்படுத்தி வழிகாட்ட முடியவில்லை.

சவுதியிலிருந்து இறக்குமதியான இஸ்லாமிய தூய்மைவாதம், தர்கா வழிபாடு , பாபரி மசூதி, மாற்று மதங்களுடன் நல்லிணக்கம் , மதரஸா கல்வி, பெண்கள் வேலை  போன்ற சமூகப் பிரச்னைகளை  எதிர்கொள்வதில் சரியான வழிகாட்டுதலில்லாததால் , இந்த சமுதாயத்தின் இளைஞர்கள் திசை மாறிப் போகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் மிக எளிதாக விதைக்கப் படுகின்றன. இளைய சமுதாயத்தின் இந்த மாற்றம் சமுதாயத்தின் மிகப் பெரும் சவால்.

திரு மன்மோகன் சிங் ஏற்படுத்திய சச்சார் குழுவின் ஆய்வறிக்கை  இஸ்லாமிய சமுதாயத்தின் பிற்போக்கை அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்களுடன்  வெளிக்கொணர்ந்தது. தலித்துகளை விட இவர்கள் பிற்போக்காக இருப்பதை சுட்டிக்காட்டியும் இஸ்லாமிய தலைவர்கள் விழித்துக் கொள்ளவில்லை . மதக் கல்வியோடு நின்று விடாமல் உலகக் கல்வியிலும் முன்னேறாதவரை இந்தப் பிற்போக்குத்தனம் மாறப்பொவதில்லை . தீவிரவாதிகளென்றும், பயங்கரவாதிகளென்றும்  குத்தப்படும் முத்திரைகளும் நிற்கப்போவதில்லை.

ஆட்சி அமைக்கும் எந்த அரசும் 24 கோடி  பெரும்பான்மையான இந்த இஸ்லாமிய சமுதாயத்தை வாக்கு வங்கியாகவோ, மாற்று நாட்டினராகவோ கருதாமல் தேசீய நீரோட்ட்த்தில் இணைத்துப் போவதே நாட்டின் இறையாண்மைக்கு உகந்தது.
------------------------------------------------------------------------------------------------------

Wednesday, February 20, 2019

India Needs you....You need IndiaThe bus route from Ahmedabad to Anand was dotted with emerging industries and evergreen rural fields . As part of our case study on corporate business  strategy at  Indian Institute of Management (  IIM  ) -Ahmedabad , we were travelling to Anand Milk Union Ltd ( from where Amul derived its brand name ) with expectation and excitement . The scheduled interactive  personal meeting with Dr Varghese Kurien, father of India’s white revolution and architect of Operation Flood was the reason for our excitement .

It was 1981 and Dr Kurien had already consolidated the cooperative movement in milk production and made India to surpass USA to become the world's largest milk producer . For the first time in the world , milk powder was made out of buffalo milk . Dr Kurien rightly  identified the problems of milk production in our country through his extensive field studies   and also understood the process of  exploitation our cattle breeding milk farmers were subjected to by the private milk producing units. Instead of paying the farmers according to the fat content of the milk that was collected , the middlemen paid them equally on the volume of milk. With the start of Milk cooperative unions where the farmers were enrolled as share holders , the cattle owners were paid according to the fat content of the milk collected . This not only  revolutionised the milk industry but made the positive  impact on the poor economic livelihood of millions of our cattle breeding farmers.

The conference hall was well lit and  when the lights went off, the screen at the middle dropped and  the film “ Manthan “ directed by the acclaimed film maker  Shayam Benegal started playing.  It was a film inspired by the Milk Cooperative movement and was dedicated to the Anand farmers. Girish Carnad and Smitha Patel acted in realistic roles. Seated along with us in the front row  was the  short and stout Milk Man of the nation who went up the stage  after the film. Though he looked very pensive after watching the movie ,  his words came like a  thunder during his address.

" Dear Friends ….. IIMs and IITs were started with a national mission but unfortunately today I see the graduates of IIMs rush to produce and market a new fragrant soap or shampoo to be used by the affluent ladies in their bath tubs    but not interested to work for our poor  farmers . Rural areas need management ideas and IIMs cannot close their eyes to this need . After milk I am planning to enter high end milk products like cheese and butter with Amul as brand and I am confident that we can be on par with Nestle . These products would help to sustain our profitability and all our shareholders would benefit . The semi urban population would for the first time taste the cheese and improve their nutrient values.  Gentlemen, your management training at IIM should be utilised for the larger masses of this nation and don’t waste your business strategies learnt here to market a shining soap or high end shoes . The country needs you for better services and products. “

Every word and expression reflected his sincerity of thought entwined with helpless anger.


Today when I see the catchy Amul cartoons and ads, I salute this man for his mission and dedication . It is a pride that Amul is exported to more than 40 countries and millions of Indian farmers are its shareholders . Amul provides livelihood for to 3.6 million men and  women across 18600 villages in Gujarat, generating an annual turnover of Rs 38,000 crores.

Dr Kurien studied at Layola college and Guindy engineering college at  Chennai and went to Michigan university for his MS in mechanical engineering in 1949 – coinciding with Indian Independence journey. He returned back to India and initiated the white revolution at a time when our nation had started its long journey towards development with its bleeding wings of poverty and communal violence .


 Many of our younger generation may not even  remember him as they remember the birthdays of their favourite film stars. Every year on his birth day  I see a small advertisement appearing in national newspapers issued by the National Diary Milk Corporation. The political leaders may forget this dedicated social engineer but our youth are to be reminded about the mission of such selfless men.

Today our IIMs and IITs are proud to declare the annual salaries of their  graduates after the placement interviews . The salaries run into crores of rupees paid by the foreign banks and multi national companies. It is sad that the original objective of starting these premium institutes is lost and the national revenues are spent to aid and assist MNCs and not our rural masses.  Is it the tribute we pay to those visionaries ?

 We are proud that the graduates of these premium institutes occupy the chief executive posts at  Silicon valley and Manhattan. But the bitter truth is that the Nation invested its rarest resources when it was starving for funds and went around the world to get aid   and established these institutes hoping  to reap the benefits for its impoverished millions .  

The real tribute will flow  only when at least a handful of  our IIM and IIT graduates use their expertise for the uplift of rural million instead of joining foreign banks , fashion chains and silicon companies


Sunday, February 3, 2019

My dear Motherland....


My dear Motherland,

Never I imagined that one day I will be writing to you with my heart and soul. Whenever I lived abroad leaving you for years and lived thousands of mile away, I used to long for your embrace and felt the pain of separation. The moment my plane touches the Chennai airport, I felt like kissing your  soil that gave me the dignity of life and  identity of being an Indian.

 Yes…among the races and regions, whites and blacks, poor and rich queuing up in front of immigration officers abroad – from Hong Kong to Holland, from Singapore to Syria , from Alexandria to Amsterdam, I felt proud to show my  dark blue passport bearing our national  emblem of three lions of Ashoka Pillar.. That moment of my own  Indian  identity was  truly exhilarating and exuberant . Today every immigration officer looks at me with amazing respect that I am  your son, the son of a great intellectual country who gave birth to lakhs of youth propelling the world economy in all spheres of life . Most of the world airports are dotted with  young Indians criss crossing the crowds of passengers with  their  laptops and  mobile phones .   Mother .. me and all Indians especially the youth  are indebted to you for bringing  us up with civilised social  culture and harmonious human heritage .

Today I am back in your arms , breathing the fresh air of freedom and fraternity .  The lush green paddy fields of my village  bordered  with the  swinging palm and coconut trees, the sound of the pump sets and its gushing stream of water, the singing birds perched on the power transmission lines carrying the electricity to all the villages around, prove to me you are healthy and growing with confidence . I could feel the beats of hope in your heart and see the rays of optimism in our future.
Today I recollect my loving mother who showed the same hope and optimism when I was born in a government hospital  at Coimbatore city. Seeing the entire hospital decorated with colourful lights and balloons, she was excited that the hospital was celebrating her son’s birthday but when the duty nurse informed her  that the decoration was to celebrate India’s first republic day , she got bit disappointed . But she  felt happy that the entire country would be celebrating the birthday of her son every year. Yes I was born on 26th January 1950. May be that coincidence might have given me the resolve that I should live as an Indian and die as an Indian.

 Dear Motherland… While my mother taught me the values of compassion with the society, my father taught me the values of nationalism and true patriotism. He  used to narrate the stories of our freedom struggle and the life of our great leaders from Mahatma Gandhi to Maulana Abul Kalam Azad. 

Mother,  I always cherish my childhood days playing in your villages – Puthuppatti and Ponnamaravathy – of Tamilnadu where I used to swim in temple tank and played “ Kittippul “ under the shades of tamarind and  the palm trees. These villages never had electricity nor any bus transport then. When the first bus entered our village all the children ran in amusement and took a free ride . That was the India I was born. Today  I am proud that my motherland has world class highways , Metro & Mono rails,  and all the luxury vehicles of the world along with high quality  state transport buses  connecting all the villages and towns.  Mother, You are the  soul and spirit for me to rest and relax.

In 1970s as an engineering college student ,when I had the opportunity to visit the temples of modern India- from the Steel Plants of Bhilai and Durgapur to the Power Plants at Bakra Nangal and Hiracut, from the Heavy Engineering plants at Ranchi to BHEL Haridwar, I could witness the glimpses of the  emerging industrialised motherland and as young engineers we all  dreamt that one day our India would become the most  powerful industrialised country. Today, with the boom in Information technology and software development , I am happy that the dream is materialising in my own life time.

Yes , my dear motherland,  I could feel that sometimes you are very sad and your eyes are moist with pain. Once you shared with me the causes of that pain…. the growing trend of the caste and communal animosity, the regional and religious hatred, the sufferings of downtrodden and the poor, the gender inequality , the suppression of your daughters and their rights … Do not worry , my dear motherland… this is the passing phase and we shall overcome soon.
You are safe by the devotion and dedication of our great soldiers safeguarding you both on the land borders and on the sea. The lakhs of army personnel, Navy and air force soldiers are dedicating their lives to you.

The Tamil poet Kavi Bharathi sang “   Muppathu kodi muhamudaiyal, sinthanai onrudaiyal.. “  My motherland ..you may have 30 crores  faces ( the population of India in 1930s ) but your thought and goal are one and one alone …
The great Gurudev  Rabintharanath Tagore also sang in his famous poem “ Amar Deshes Mati “
You have become blended in my body,
You have united with my heart and soul,
That verdant, tender form of yours is imprinted forever in my heart of heart
 My dear Motherland ..   Let your face smile always with happiness and joy with 130 crores hearts  praying  for your strength and unity .

Jai Hind

Thursday, April 24, 2014

Do not call us Minorities.....


Do not call us “ Minorities''
                                                                                   C J Shahjahan

Forty years back, the word ‘ Dalit “ was not in popular usage . It was Mahatma Gandhi who named the suppressed society as harijans ( Children of God ) and founded Harijan Sevak Sangh in 1932. He even started a weekly in the name of Harijan .  While conversing the merits of reservation policy with my dalit BHEL  colleague , I casually mentioned the word “ harijan “  and immediately my friend retorted back furiously with a hurt feeling – If we are the children of Hari, who are the other people ?  Don’t call us  harijans and isolate us from the society. It is demeaning.   My indomitable respect for Mahatma did not allow me to appreciate his hurt feelings three decades ago.

But, today, when every political leader and the mass media use the phrases - Minority appeasement. Minority uplift, Minority vote bank, Minority reservations, Minority quota -  I feel the same anguish and anger of my BHEL dalit friend.

Why are we Muslims being  branded as minorities ?

How am I different from my friends Sivaramakrishnan and Rangaswamy  ?

Am I  not the same Indian who salutes the national flag and stand in attention for the national anthem ?
Then why this seal of segregation as a  minority ?

When called as minority one undergoes subtle psychological depression with a lurking fear of being bullied by the majority. This fear and insecurity create an offensive mechanism in an individual and some of the political groups try to mobilize such vulnerable  individuals for combat and communal ism.


The United Nations study group defines ‘ Minority ‘ as a culturally, ethnically, or racially distinct group that coexists with but is subordinate to a more dominate group. Because they are socially separated or segregated from the dominant forces of a society , members of a minority group  are usually cut off from a full involvement in the workings of the society and from an equal share in the society’s welfare. 

There are three distinct forms of majority- minority  existence in a society. In the most rarest form,  a minority may disappear from a society via assimilation , a process through which a minority group replaces its traditions with those of dominant culture.   The other  extreme form is the forceful elimination of a minority  by mob violence , ethnic cleansing and genocide. These forms of oppression devastate the economic, political and mental health of both the minority and majority population. The intermediate form is the pluralistic society where the dominate group accepts the co-existence of a minority and opt for amity and tolerance  for its own  political, moral  and economical gains.

Indian Muslims all along experienced the benefits of this pluralistic patronage and it is unfortunate that today  certain  divisive forces from both the groups try to destroy this pluralism .

The original objective of offering social justice to the Muslims after independence  has in due course  drawn a dividing line between Indian Muslims and the rest of the religious groups.  It has done more harm to the  Muslim psyche  as well as the national integration .  The psychological feeling of being a minority instills insecurity and inferiority . The major Indian Muslim political parties exploit this insecurity to widen their support base.
While the plethora of minority groups and political parties cry for more percentage of reservations for Muslims, the Hindutva parties highlight the fallacy of minority appeasement at the cost of majority .  This process of pull and pressure has widened the chasm between Muslims and Hindus during the past decade especially after the post babri masjid demolition.  The communal harmony and the national integration are the twin casualties in this process.  
The constitution of India does not define the term “Minorities “anywhere and it also does not guarantee any special privileges to the minority groups. But as  a welfare state , the governments both at the center and at the state level , extend the welfare programmes  to the minorities as and when it suits their vote bank priorities.

The constitutionally guaranteed reservations for the scheduled castes and tribes might have improved marginally the economic indicators over the past 60 years but till date the dalits and the most backward groups could not be integrated emotionally and psychologically with the mainstream of our social strata.  Our political leaders have destroyed the fabric of Indian society by wooing only the votes and not the hearts of the dalits

The same results can be inferred if the muslim groups succeed in getting even the 10 percent  reservations in government jobs and in educational institutions.  The reservations may throw up some more  lucrative jobs for the handful of muslim youth in defense, police , IAS & IFS cadres  but the society will still live in isolation and backwardness . Muslim families will be denied housing for rent in metros, their innocent youth will continue to languish in jails with uncertain future  and any minor altercation will still provoke a full blown communal flame that would consume thousands of young men, women and children on both the sides.  Is this our goal of minority  welfare  ?
Justice Rajindar  Sachar committee report clearly highlighted the cause of muslim backwardness in the social and educational front and stated that muslims are the most backward community despite rich cultural heritage.

 While madarasa education may uplift the souls, it is only the modern education that can uplift the society.  Muslim leaders should realize that both the madarasa and the modern  educational systems are not contradictory but complimentary.  Science and its inventions when studied objectively reemphasize the religion and the faith .  Muslim scholars and ulema  should now recognize the fact that modern education and undistorted Islamic values are the only twin tools of Muslim emancipation in this country. 

Islam, as a religion, preaches egalitarianism with an equitable mix of capitalism and socialism. It  not only ordains zakath ( Poor Tax ) on every eligible  muslim who has to partake a portion  of his  wealth to the needy and the  poor but also prohibits all kinds of interest which destroy the poor families.

  During the inauguration of National Waqf Development Corporation ( NAWDCO ) in the capital recently , Prime Minister informed the audience that the registered waqf properties currently  generate 163 crores of income annually and if properly monitored and developed the total waqf assets alone can contribute Rs 12000 crores every year. Most of the waqf properties are in prime urban locations and presently controlled by unscrupulous and selfish muslim trustees. 

If alone , the rich muslims pay proper zakath every year  and  Muslims could  harness the annual income   of 12000 crores  from waqf  properties , the community need not  beg for reservation  and agitate to implement the  recommendation of   Ranganath Misra commission report.

. The population of Indian Muslims exceeds 170 million, third largest Muslim majority in the world, next only to Indonesia and Pakistan. The community of Indian Muslims is 10 times larger than Malaysia, 6 times larger than Saudi Arabia and twice that of Egypt. If one has to go by sheer numbers, Indian Muslims are  in majority compared to their religious counterparts of other nations.

Why then a community of 170 million is branded as a minority ?

I wish to live in an India where I feel as an Indian on par with my neighbours .
Please, do not call us  minorities anymore.

                                                            ------------------------
                                  

                                                                

Monday, October 7, 2013

My Travel Experience in Syria ( Tamil )பயணக்கதை :

டெமாஸ்கஸ் (சிரியா )
                                                                                                            கல்யாண வீட்டுக் கலகலப்பை மிஞ்சுமளவுக்கு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தது அந்த உணவு விடுதி. குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குட்டையான மேஜைகளின் முன் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்க வகைவகையான அரேபிய உணவுவகைகளை மிகச் சுறுசுறுப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். மூலையிலிருந்த இளைஞர் கூட்டமொன்று அரேபியப் பாடலொன்றுக்குப் பலமாகக் கைதட்டிக்கொண்டிருந்தது.

அழகுப்பதுமைகளாக அரேபியப்பெண்கள். சிலர் ஜீன்ஸ், டி ஷர்ட்டுடன் ஐரோப்பியர்களைப் போல உடையணிந்திருந்தாலும் பெரும்பாலான பெண்கள் கறுப்பு அபயா ( பர்தா ) அணிந்திருந்தார்கள். யாரும் முகத்தை மட்டும் மூடுவதில்லை. ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல சிவந்த நிறம்.

“ இங்கே ஒரே சமயத்திலே அறுநூறு பேர் சாப்பிடலாம். அப்படியும் ரிஸர்வ் செய்யாவிட்டால் ஒருமணி நேரம் காத்திருக்கணும். டெமஸ்கஸிலேயே சிரியன் வகை அரேபியச் சாப்பாடு இங்கேதான் ரொம்பச் சுவையாக இருக்க்கும். என்ன, சி. ஜே. பிடிச்சுருக்கா ? “

பக்கத்திலிருந்த நண்பர் ஹோம்ஸி அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டபொழுது ‘ பாபாகனுஜ் “ என்ற சுட்ட கத்திரிக்காய் மசியலை குப்ஸில் ( நம்மூர் தந்தூரி ரொட்டி ) நனைத்து சுவைத்தவாறே “ பிரமாதம் “ என்று சொன்னேன். சிதம்பரம் பக்கம் நடராஜர் கோவிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில்  இட்லிக்குத் தொட்டுக்க கொத்சு தருவார்கள். அதே போன்ற சுவை.

                           
 சிரியாவில்  உணவை ஆர்டர் செய்யும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எடை தாங்காமல் டேபிள் விழக்கூடிய அளவுக்கு வகை வகையான உணவு வகைகளை  நிரப்பிக் கொண்டே போவார்கள்.

எங்கள் முன்னாலிருந்த இருக்கைகளில் மலர்க்கூட்டமென இளம்பெண்கள் சிலர் வந்தமர்ந்தார்கள். கல்லூரிப் பெண்களுக்கேயுரிய கலகலப்பான அரட்டை. அந்தக் கூட்டத்திலேயே நான் மட்டுமே இந்தியன் என்பதால் எல்லோருடைய பார்வையும் என்னைச் சற்று சுவாரஸ்யமாகப் பார்ப்பது புரிந்தது.

சிரியாவிற்கு இந்தியர்கள் வருவதே மிகவும் குறைவாம். மற்ற அரபு நாடுகளைப் போல இரு நாடுகளுக்கிடையே வணிகப் பரிமாற்றமோ, பண்பாட்டுப் பரிமாற்றமோ அதிகமில்லாததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

திடீரெனெ எதிரிலிருந்த இளம்பெண்கள் என்னைச் சுட்டிக்காட்டி சிரித்த காரணம் புரியாது நான் பக்கத்திலிருந்த எங்கள் கம்பெனியின் சிரியன் கிளை பர்சனல் மேனேஜரான பாத்திமாவைப் பார்த்தேன்.

  ஒண்ணுமில்லே மிஸ்டர் சி. ஜே. நீங்க இந்தியரான்னு கேட்டாங்க.. ஆமாம்னு சொன்னேன். அவங்களுக்கு உங்க இந்தி சினிமான்னா ரொம்ப உயிராம். உங்களை ஒரு பாட்டுப் பாடச் சொல்றாங்க.. “
அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று நண்பர் ஹோம்ஸியிடம் பணிபுரியும் பாத்திமா மொழிபெயர்த்துச் சொன்னார்.

  பாட்டா..அதுவும் முன்பின் தெரியாத எல்லோர்முன்னால்..அதுவும் இப்படி உணவு விடுதியிலா….. “


-     
நமது இந்தியர்களுக்கேயுரிய தயக்கம்…கூச்சம்.

  அப்ப..நாங்களே பாடவா..உங்க ஷாருக்கானை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சூப்பர் ஹீரோ.  ஆமா.. முஜே தும்ஸே ப்யார் ஹோகயான்னா என்ன அர்த்தம் ? “

“ எனக்கு உன்னிடம் காதல் வந்துவிட்டது ன்னு அர்த்தமாம்.. “

பாத்திமா அரபியில் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல கொல்லென்ற சிரிப்புடன் “  முஜே தும்ஸே ப்யார் ஹோகயா “ ன்னு அந்த இளம் சிட்டுக்கள் என்னைப் பார்த்துப் பாடத் தொடங்க அந்த இடமே கலகலப்பாகியது. மொழிபுரியாவிட்டாலும் வயதான மூதாட்டிகள்கூட கைகொட்டிப் பாடலை ரசித்தார்கள்.

சென்னை சரவண பவனில் ஏதோ பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதும் மாணவர்களைப் போல, சைலன்ஸ் ப்ளீஸ் போர்டிற்கு மதிப்புக் கொடுத்து  அமைதியாகச் சாப்பிட்டு எழுந்து வரும் நமது கட்டுப்பாடு நினைவில் வருகிறது.

கவலைகளை மறந்து கொஞ்சநேரமாவது கலகலப்பாகிப்போனால் நெஞ்சத்து இறுக்கங்கள் தளர்ந்து உடல் ஆரோக்கியம் கூடுமாம். நாமும் முயற்சி பண்ணலாமே..

சாப்பிட்டு எழுந்தபொழுது பெண்கள் ஒவ்வொருவராக வந்து கை கொடுத்து டாடா சொல்லிப் போனார்கள்.

வெளியே-----
இரும்புக்கூரை வேயப்பட்ட ஹமீதியா சூக்கென்னும் கடைத்தெரு நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.


                         வகைவகையான துணிக்கடைகள், வாசனைத் திரவியங்கள், ஆலிவ், உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, சிரியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகள், ரத்தினக் கம்பளங்கள்., சிரியாவின் தந்த வேலைப்பாட்டு நகைப்பெட்டிகளென கடைகள் முழுவதும் பொருட்கள்..

  சி.ஜே.  இந்த ஹமீதியா சூக் கடைத் தெரு வெளிநாட்டுப் பயணிகளுக்கு  வரப்பிரசாதம். விலையுயர்ந்த கம்பள விரிப்புகளிலிருந்து சிரியாவின் உயர்ந்த ரக பட்டுதுணிகள் வரை இங்கே கிடைக்கும். இப்படியே நேராகப் போனால் ஒமாயத் மசூதி  ( Omayyad Mosque ) வரும். இந்த மசூதி சிரியாவின் வரலாற்றை மட்டுமல்ல மனித சமுதாயத்தின் வரலாற்றையே இன்றைக்கும் பிரதிபலிக்கும் முக்கியமான இடம். கட்டாயம் பார்க்கவேண்டிய வரலாற்றுச் சான்று. வாங்க போகலாம். “

அமெரிக்கப் பட்டப்படிப்பு முடித்து சிரியா வந்துவிட்ட பாத்திமா சரளமாக ஆங்கிலம் பேசியது எனக்கு உதவியாக இருந்தது. வெறும் அரபி மொழிமட்டுமே பேசும் சிரிய நாட்டு இஞ்சினியர்களைத் தேர்ந்தெடுக்க பாத்திமா மொழிபெயர்த்து உதவ நியமிக்கப் பட்டிருந்தார். சிநேகாவைப் போலக் கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சிரிப்பு. கண்ணிமைகளில் கூட எட்டிப் பார்க்கும் புன்னகை… ஆனால் அந்தப் புன்னகையின் பின்னால் ஏதோவொரு சோகம் தளும்பித் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. என்னவாக இருக்கும் ?

“ என்ன சி .ஜே. மலைத்துப் போயிட்டீங்க..இதுதான் ஒமயத் மசூதியின் வாசல். உள்ளே போகலாமா .. “


நண்பர் ஹோம்ஸி சிரித்துக் கொண்டே கையைப்பிடித்தார்.


 கிழக்கு வாயிலிலிருந்த முகப்பு, சிதைந்து போன நமது செஞ்சிக் கோட்டையை நினைவுபடுத்தியது.இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜூபிடர் தெய்வத்திற்கு ரோமர்கள் கட்டிய கோயிலின் நுழைவு வாயிலாம் அது.

: சி. ஜே.  இந்த மசூதிக்கு நிறைய வரலாறுகள் உண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஹதாத் என்ற தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் ரோமர்கள் ஆட்சியில் ஜூபிடர் தேவதையின் கோயிலாக விரிவுபடுத்தப்பட்டது. சிரியாவுக்கு கிறித்துவம் வந்தபோது ஜூபிடர் கோயில் செயின்ட் ஜானின் சர்ச்சாக

மாற்றப்பட்டது. பின்னர் அரேபியாவில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட சமயம், உமயத் இஸ்லாமியப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிரியாவைக் கைப்பற்றி, செயின்ட் ஜான் சர்ச்சை உமயத் மசூதியாக மிகப் பிரம்மாண்டமாக மாற்றியமைத்தார்கள். அப்பொழுது கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் அருகருகே தொழுது வந்தார்களாம். இந்த மசூதி கட்டப்படும்பொழுது எழுதப்பட்ட கணக்கு வழக்குகளைச் சுமக்க மட்டும் சுமார் ஐம்பது ஒட்டகங்கள் தேவைப்பட்டதாம். வாங்க.. உள்ளே போய்ப் பார்க்கலாம்.  

உலகின் மிகப்பெரும் மதங்களாகக் கருதப்படும் கிறித்துவம் ,இஸ்லாம், யூத மதம் மூன்றுமே சொந்தம் கொண்டாடும் இறைவனால் வாக்களிக்கப்பட்ட புனித பூமி ( Promised Holy Land ) யாகக் கருதப்படும் பாலஸ்தீனிய நாடு, அருகிலுள்ள லெபனான், யூதர்களின் தனி நாடான இஸ்ரேல், இஸ்லாமிய ஜோர்டான் எல்லாமே ஒரு காலத்தில் சிரியப் பேரரசின் ஆட்சியில் இருந்தவை. ஷாம் ( SHAM ) என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிரியாவின் இந்தப் பகுதி பெரும்பாலும் பாலைவனப் பகுதியாகவும் ,மணற்குன்றுகளாகவுமே இருக்கிறது.


இறைத் தூதர்களான ஆபிரகாம், மோஸஸ், ஏசு கிறிஸ்து, ஜோஸப், சாலமன் – அனைவரும் வாழ்ந்து ஏக இறைவனின் நம்பிக்கையைப் போதித்த பகுதி சிரியா. இறைத் தூதர் முகமது நபி மக்காவிலிருந்து வியாபாரம் செய்ய ஒட்டகங்களில் பயணம் செய்த இடமும் சிரியாதான். எனவே ஷாமென்ற சிரியா எல்லா இறைத்தூதுவர்களின் காலடிகள் பட்ட புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.

“ சி.ஜே.  இதோ மசூதியின் இந்த மினாராக் கம்பத்தைப் பார்த்தீர்களா..இதற்குப் பெயர் ஏசுவின் மினாரா ( MInarat Esa )  உலகத்தின் இறுதி நாளன்று ஏசு பெருமான் இந்த மினாரா வழியாக மீண்டும் தோன்றுவாரென்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமியர்களுக்கு ஏசு பெருமானும் மதிக்கத்தகுந்த இறைத்தூதரென்று உங்களுக்குத் தெரியுமல்லவா..  


நான் அந்த மினாராக் கம்பத்தைப் பார்த்தேன். ஒரே இறை நம்பிக்கையுள்ள இரண்டு மதங்கள் , CLASH OF CIVILISATION – நாகரீக மோதல் என்ற பெயரில் சந்தேகமும் வன்முறையுமாக மோதிக் கொண்டு மடியும் உலகில் மத ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக அந்த மினாரா என் கண்களுக்குத் தெரிந்தது. ஏசு  மீண்டும் இந்த மினாரா மூலம் இறங்கிவரும் வரை இந்த மோதல்களும் இரத்த ஆறும் தொடரத்தான் வேண்டுமா ..  

உள் நாட்டுக் கலவரங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சிரியாவைப் பற்றிய சின்ன வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது பயனாக இருக்கும்.

 சிரியா—உலக வரலாற்றில் மொஹஞ்சதாரோ, நைல் நதி நாகரிங்களுக்கொப்பான மிகப் பழமை வாய்ந்த நாடு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 5000 ஆண்டுகளின் வரலாற்றுச் சுவடுகளை இன்னமும் தாங்கிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் இருக்கக்கூடிய ஒரே
நகரம் சிரியாவின் தலைநகரமான டெமாஸ்கஸ். பழைய நாகரிங்களின் பெரும்பாலான தலைநகரங்களும் சரித்திர நகரங்களும்  வலுவிழந்தும் ஒரேயடியாக காணாமற் போயுமுள்ள நிலையில் இன்றளவும் உயிரோட்டமாக உள்ள ஒரே நகரம் டெமாஸ்கஸ்தான் என்று வரலாற்று அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். இந்த நாகரிகத்தைப் பற்றி இந்தியர்களான நமக்கு அதிகமாகத் தெரியாதது வருத்தமான விஷயம்தான்.

மிருக வேட்டையிலிருந்து கற்கால மனிதன் விவசாயத்திற்கு மாறிய காலக்கட்டத்தில் (  9000 BC ) பரதா என்ற சிரியாவின் ஆற்றுப்படுகையும் , பக்கத்திலுள்ள யூப்ரடீஸ் டைகரீஸ்  நதிக்கரைகளும்தான் மனிதனின் நாகரீகத் தொட்டில்களாக வர்ணிக்கப்படுகின்றன. பரதா என்ற நதிக்கும் பரதம் என்ற நமது நாட்டிற்கும் ஏதாவது தொடர்புண்டா என்று வரலாற்று மாணவர்கள் ஆய்வு செய்யலாம்.


முதன் முதலாக  கி.மு 1200 லேயே உலகிற்கு எழுத்துருவத்தைக் கொடுத்ததும் சிரியா நாகரிகம்தான். இயற்கையான அரண்களில்லாததால் சிரியாவும் அதன் தலைநகரமான டெமாஸ்கஸும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சாம்ராஜ்ஜியப் படையெடுப்புகளால் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டன. கிறிஸ்துவிற்கு முன்பு ஆர்மீனிய , பாரசீக, ரோமாபுரிச் சாம்ராஜ்ஜியங்களும் எகிப்து மற்றும் அலெக்ஸாண்டரின் கிரேக்கப் பேரரசும் சிரியாவைத் தாக்கித் தன் வசமாக்கின. பிறகு நூறு கிலோமீட்டரருகேயுள்ள பாலஸ்தினியத்தில் கிறிஸ்து பிறந்த பிறகு மதங்களின் பெயரால் படையெடுப்புகள் தொடர்ந்தன.
                        

சிரியா உருவ வழிபாட்டிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியது. பிறகு பக்கத்திலுள்ள அரேபியாவில் இஸ்லாமிய மதம் தோன்றி , காலிப் அலியின் மறைவிற்குப் பிறகு , இஸ்லாமியத் தலைநகரை மதினாவிலிருந்து  டெமாஸ்கஸிற்கு மாற்றியவர்கள் உமயத் பேரரசர்கள். கி.பி 700 ல் சிரியா இஸ்லாமியர்கள் வசமாகிய பின் மதவெறுப்பின் அடிப்படையில் சிலுவைப் போர்களை ஐரோப்பியர்கள் தொடங்கினர். துருக்கியர்களின் ஒத்தமான் பேரரசு , பிறகு ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என வரிசையாக சிரியா ஆதிக்க அரசுகளின் கைப்பிடியில் சிக்கிய பிறகு 1946 ல் சுதந்திரம் பெற்றது. மக்களாட்சிக்கு மாறாக சோவியத் யூனியனின் ஆதரவுடன்  அடக்குமுறை அதிபர்களின் கைகளில் அதிகாரம் மாறியது. அரபு நாடுகளின் மக்களெழுச்சி சிரியாவிற்கும் பரவி அதிபர் சதாத்திற்கெதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

ஒமயத் மசூதியில் தொழுகைக்கு வருபவர்களைவிட சுற்றுலாப் பயணிகளே நிரம்பியிருந்தனர். மசூதிக்குள்ளே இரண்டு முக்கியக் கல்லறைத் தலங்களிருந்தன. கிழக்கு மூலையில் இறுதி இறைத்தூதரான முகமது நபி ( ஸல் ) அவர்களின் பேரரும் இன்றைய ஈராக்கிலுள்ள கர்பலா மைதானத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவருமான ஹஜ்ரத் ஹுசைன் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிருக்கிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் புனிதமான திருத்தலம். சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் மொகரம் பண்டிகையின்போது இரத்தம் சொட்ட சொட்ட இரும்புச் சங்கிலியால்  மார் தட்டிக் கொண்டு ஷியா பிரிவினர் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கலாம். ஹஜரத் ஹுசைன் கர்பலாவில் செய்த உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்து துக்கப்படும் ஊர்வலமிது.    ஒமயத் மசூதியின் இந்தக் கல்லறைக்கருகே உடல் முழுக்க பர்தா அணிந்த ஈரான், ஈராக்கைச் சேர்ந்த  பெண்கள் கண்ணீருடன் கையேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
                       மசூதியின் நடுவில் பச்சை நிறத்தில் தங்க அலங்காரங்களோடு இருந்த இன்னொரு கல்லறையின் வரலாற்றை அறிந்தபொழுது ஆச்சர்யமாக இருந்தது. இயேசு நாதருக்கே முதன்முறையாக ஞனஸ்நானம் செய்துவைத்தவரும் இயேசுவாலேயே இறைவனின் நேசப்பிரியர் என்று மதிக்கப்பட்டவருமான ஜான் தி பாப்டிஸ்ட்  (  JOHN THE BAPTIST ) ன் கல்லறைதானது என்ற தகவல்கள் வியப்பைக் கொடுத்தன.

இஸ்லாமிய வரலாற்றில் அருள்மிகு ஜான் இறைத்தூதர் யாஹ்யா ( YAHYA ) என அழைக்கப்படுகிறார். பிள்ளை பிறக்கமுடியாத முதுமையிலும் ஜக்கிரியாவிற்கு யஹ்யாவை மகனாகக் கொடுத்த அல்லாஹ்வின் கருணையை நினைவு கூறுமாறு திருக்குரான் கூறுகிறது. இவர் இயேசு நாதருக்கு ஞானஸ்நானம் செய்வித்த இடம் பக்கத்து நாடான ஜோர்டானின் தலைநகரான அம்மானின் அருகிலிருக்கிறது. மறைந்த போப்பாண்டவர் இந்தக் கல்லறைக்கு வந்து பிரார்தனை செய்திருக்கிறார். இஸ்லாமிய மசூதிக்கு ஒரு போப்பாண்டவர் வந்து பிரார்த்தனை செய்தது இதுவே முதல் தடவையாம்.  ஏசு பிறந்த சமயம் சிரியாவை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகார மன்னன் ஹிராட் பக்கத்து நாட்டு அரசியிடம் மையல் கொண்டு திருமணம் முடிக்க இருந்ததை புனிதமிகு ஜான் எதிர்த்தாரென்பதால் அவருடைய தலையை வெட்டிக்கொண்டு வர அரசி செய்த சூழ்ச்சியில் புனிதமிகு ஜான் இறந்ததாக வரலாறு.  துருக்கிய ஒத்தமான் மன்னர்கள் ஒமயத் மசூதியை விரிவுபடுத்தியபொழுது புனித ஜானின் தலையையும் கூட இருந்த குறிப்பையும் கண்டெடுத்து மசூதிக்குள்ளேயே கல்லறைத்தளம் அமைத்து விட்டார்கள். இரண்டு மதங்களின் பிரார்த்தனைக் குரல்களையும் இணைக்கும் புனிதமான இடம் ஒமயத்.

  மசூதியை விட்டு வெளியே வந்தால் தி நகர் ரங்கநாதன் ஸ்டைலில் ஹமீதியா சூக் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. எதிரே வருவோரோடு மோதாமல் நடப்பது கடினம். தந்தம் மற்றும் முத்துச்சிப்பிகளை மரப்பலகைகளில் பதித்து மொஸைக் டிசைன்களால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மரச் சாமான்கள் சிரியாவின் தனிச்சிறப்பு. சிரியாவின் நினைவாக இந்த கைவினைப் பொருட்களில் எதையாவது வாங்காமலிருக்கமுடியாது.

நண்பர் ஹோம்ஸி தந்த மர டிரேயொன்றை வாங்கி எனக்குப் பரிசளித்தார்.

  ஹோம்ஸி..எங்கு பார்த்தாலும் துருக்கிக் குளியலறைகள் ( TURKISH BATHS ) என்று போர்டு தொங்குகிறதே .. சாதாரணக் குளியலுக்கு ஏனிந்த அலங்கார விளம்பரங்கள்? 

ஹோம்ஸி கண் சிமிட்டி சிரித்தார்.

:  ஓ.. இதுவரை நீங்க டர்கிஷ் பாத் எடுத்ததில்லையா..வாங்க..போய்ப் பார்ப்போம். அது தனி அனுபவம். ஏழாவது நூற்றாண்டின் நூர்தீன் ஹமாம் ரொம்பப் பிரசித்தி பெற்றது. துருக்கிக் குளியலறைகளில் முதலில் நம்மை மிதமான நீராவிக் குளியலில் வேர்க்க வைத்து , உடலை நன்றாகத் தேய்த்து, வாசனை திரவியங்களைத் தடவி, மசாஜ் செய்து, எலும்பு ஜாயிண்ட்களை சொடுக்கெடுத்து , திடீரென ஜில்லென்ற ஐஸ் நீரில் மூழ்கடித்து... “

அவர் சொல்லச் சொல்ல நான் உள்ளே போகாமல் திரும்பினேன்.

..கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குளித்து முடித்து துருக்கி டவலோடு ஏலக்காய் போட்ட சூடான துருக்கிக் காபியை சுவைக்கும்பொழுது உடலும் மனமும் லேசாகிப் போகும் சி ஜே.. வாங்க  ட்ரை பண்ணுங்க.. “
சிரியா துருக்கிய ஆளுகையிலிருந்ததால் துருக்கியப் பழக்கங்கள் இன்னமும் மாறவில்லை. பாங்காக்கின் மஸாஜ் பார்லர்களைப்போல
துருக்கிக் குளியலறைகளிலும் கவர்ச்சிக் கண்ணோட்டம் நிறைந்துவிட்டதால் கொஞ்சம் ஜாக்கிரதை தேவை.

சிரியாவில் இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இத்ற்கென்று தனி மார்க்கெட்டே இருக்கிறது.  பாலாடையும், நெய்யில் வறுக்கப்பட்ட சேமியாவும் , பாதாம் பிஸ்தாவும் கலந்து தயாரிக்கப்பட்ட குனாபா  மேல் சர்க்கரைப் பாகை ஊற்றி பாதையோரங்களிலும் மக்கள் சாப்பிடும்பொழுது நமக்கும் நாவில் நீருறும்.

இத்தனை எளிமையான குடும்பப்பாங்கான கலகலப்பான மக்களிடையே வெடித்திருக்கும் உள்நாட்டுப் புரட்சியைப் பயன்படுத்தி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த மனித நாகரிகத் தொட்டிலின் மேல் ஏவுகணைகளை வீசத் தயாராவதைக் கற்பனை செய்தாலே நெஞ்சில் இரத்தம் கசிகிறது. இதைப் பற்றி யாரிடமாவது பேசமாட்டோமாவென்று நினைத்தபொழுதுதான் இரவு விருந்தின் போது நண்பர் அப்துல் ரசாக் என் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

சோவியத் ஆதரவிலேயே இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் இங்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது உண்மைதான் சி. ஜே. ஈராக் சதாம் ஹுஸைனின் பழைய பாத் கட்சிதான் இங்கேயும் ஆட்சி நடத்துகிறது. இது ஒருவகை ராணுவ ஆட்சிதான்.மதத் தீவிரவாத இயக்கங்கள் இல்லாமலில்லை.
                         ஆனால் மக்கள் பொதுவாகவே அமைதியானவர்கள். ஆட்சி புரிபவர்களின் தவறுகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பாவத்தை மேலை நாடுகளும் இந்தத் தற்கொலைவாதத் தீவிரவாதிகளும் ஆப்கனிஸ்தான், ஈராக் என்று தொடங்கி இப்பொழுது சிரியாவிற்கும் வந்துவிட்டார்களே என்பதுதான் எங்கள் கவலை…
இரவு விருந்திற்காகப் புதிதாகத் திறக்கப்பட்ட இந்தியா கேட் என்ற மிகப் பெரிய திறந்தவெளி உணவுவிடுதியில் அமர்ந்திருந்தபொழுதுதான் அப்துல் ரசாக் மனம் திறந்தார். இந்தியக் கலாச்சாரத்தை மதித்துத் திறக்கப்பட்ட உணவுவிடுதியாம். அரேபிய இசைக் கருவி  தம்பூரில் மெல்லிய இசை அலைபாய . ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக உணவு விடுதியே களை கட்டியிருந்தது. இருக்கைகளில் அமர்ந்ததுமே ஹூக்கா எனப்படும் புகையிலைக் குழாய்களைக் கொண்டுவந்து அதற்கான நெருப்புத் துண்டங்களைப் பொறுக்கியெடுத்து குழாயின் மேல்பகுதியில் வைத்துவிட்டுப் போகிறார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் மேலே கம்பளிச் சால்வையைப் போர்த்தி விடுகிறார்கள்.  ஸ்வெட்டர் அணிந்தும் குளிர் நடுக்கியது.

பக்கத்திலிருந்த பாத்திமா கொஞ்சம் பதட்டமாக இருப்பதாகப்பட்டது. அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

மனதில் அரித்துக் கொண்டிருந்த சந்தேகத்தைப் பாத்திமாவிடம் கேட்க இதுதான் சரியான வாய்ப்பு என்று தோன்றியது.

  பாத்திமா… ஏதாவது ப்ராப்ளமா ? “

    நோ..நோ..வீட்லே பசங்க தனியாக இருக்காங்க.. “

   ஓ.. அவங்க அப்பா கூட இல்லையா ? “

  அப்பா…. “

    பாத்திமாவின் கண்களில் நீர் முட்டியதும்தான், நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

:  என் கணவர் விவாகரத்து செய்து நான்கு வருடங்களாகிவிட்டன. நாங்கள் இப்போ தனியாகத்தானிருக்கிறோம். வாழ்க்கை ரொம்பவும் குரூரமானது சி. ஜே….. “

என் நெஞ்சில் வேல் பாய்ந்த வேதனை.

கள்ளங்கபடில்லாது கலகலப்பாகப் பழகும் இந்த அழகான மனைவியை ஒதுக்கிவிட்டு ஓட அந்தக் கணவனுக்கு எப்படி மனம் வந்திருக்கும் ? அதுவும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானபிறகு …

பொதுவாகவே அரபு நாடுகளில் இந்த விவாகரத்துப் பிரச்னை பெரிய சமூகப் பாரமாகிவிட்டது. சமயத்தின் நெளிவு சுளிவுகளில் புகுந்து தங்கள் சுய நல இச்சைகளுக்காகத் தடம் புரளும் ஆண்களினால் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது அரேபிய
சமூகத்தின் பெரிய சமுதாயத் தலைவலி.

“ நோ.. பாத்திமா. உங்க துக்கம் எனக்குப் புரிகிறது. ஆனா வாழ்க்கை குரூரமானதில்லை. உங்களைப் போன்ற படித்தவங்களே மனம் தளரலாமா? கால்களுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் பட்டேன், கால்களேயில்லாத முடவனைப் பார்க்கும்வரை..என்று எங்கள் கவிஞர் பாடியிருக்கிறார். “

  அப்படியா..உங்க நாட்டில் வாழ்க்கையை இவ்வளவு பக்குவமாகவா எடுத்துக்கிறீங்க..? 

                         


 “ யெஸ் பாத்திமா…எங்க பண்பாட்டின் ஆதாரமே இதுதான். பசங்களை நல்லாப் படிக்க வையுங்க..அதுவே உங்க வெறுமையையும் வெறுப்பையும் மாத்திடும். 

பாத்திமா என்னை நம்பமுடியாமல் பார்த்துச் சிரித்தார். அந்த சிரிப்பில் கண்ணீர் தெறித்தது.

மறுநாள் சிரியாவிலிருந்து ஜோர்டானுக்கு காரிலேயே போகலாமென்று முடிவு செய்து டாக்ஸியொன்றில் பயணமானபொழுது பாத்திமாவும், ஹோம்ஸியும் கையசைத்து விடைகொடுத்தார்கள்.

பாத்திமாவின் கண்களில் நன்றி கலந்த சிரிப்பு.

மீண்டும் ஓர் உறவுக்கு விடைகொடுக்கிறேன்.

                  ---------------------------------------------