Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Sunday, December 5, 2010

Nodigalin Maunam..

வீட்டிற்கு வெளியே
வினோத சப்தங்கள்
என் மனதிற்கு உள்ளேயோ
உன் மூச்சின் நிசப்தம் மட்டுமே..
வானம் முழுவதும்
வண்ணத் தாரகைகள்
என் எண்ணம் முழுவதும்
உன் கண்ணிமைக் கருவிழிகள்
வேகம்..வேகமெனப் பறக்கும்
சென்னைப் பரபரப்பில்
நாம் சந்தித்த நொடிகள் மட்டும்
ஏனிப்படி மௌனம் சாதிக்கின்றன ?